நோர்வூட் பிரதேச செயலகத்தை ஹட்டனுக்கு மாற்ற வேண்டாம்!

நோர்வூட் பிரதேச செயலகத்தை ஹட்டன் பகுதிக்கு மாற்றும் தீர்மானத்துக்கு நாங்கள் உடன்படவில்லை. ஆரம்பத்தில் இருந்து எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளோம். மக்களின் தேவை மற்றும் கருத்துக்களுக்கு மதிப்பளித்து செயற்படுமாறு அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்கிறேன் என மலையக மக்கள் முன்னணியின் தலைவர் இராதாகிருஸ்ணன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (04) நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சு மற்றும் தொழில் அமைச்சு மீதான குழு நிலை விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

நல்லாட்சி அரசாங்கத்தில் பல பிரதேச சபைகள் பிரிக்கப்பட்டன. அதேபோல் பிரதேச செயலகங்களும் பிரிக்கப்பட்டன.

இதற்கமைவாக பிரிக்கப்பட்ட நோர்வூட் பிரதேச செயலகத்தை தற்போது ஹட்டன் பகுதிக்கு கொண்டு செல்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக அறிய முடிகிறது.

நோர்வூட் பிரதேச செயலகத்தை பிறிதொரு இடத்துக்கு மாற்ற வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். கடந்த மாதம் நடைபெற்ற நுவரெலியா மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்தில் இந்த விவகாரம் பற்றி பேசப்பட்டதாகவும், நான் அதில் கலந்துக் கொண்டதாகவும் குறிப்பிடப்படுகிறது.

நான் அன்றைய தினம் அக்கூட்டத்தில் மதிய வேளை வரையில் இருந்தேன். இருப்பினும் நான் இல்லாத சந்தர்ப்பத்தில் தான் அதாவது மாலையில் தான் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

ஆகவே இதற்கும் எனக்கும் தொடர்பில்லை. செயலக பிரிவை ஹட்டனுக்கு மாற்றியமைக்கும் தீர்மானத்துக்கு நாங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளோம்.

நோர்வூட் பகுதியில் 177,938 பேர் வசிக்கிறார்கள். செயலகத்தின் 110 உத்தியோகஸ்த்தர்களுக்காக பிரதேச செயலகத்தை ஹட்டனுக்கு மாற்றுவது சரியானதா என்பதை ஆராய வேண்டும்.

இந்த பகுதியில்தான் மஸ்கெலியா, பொகவந்தலாவ ஆகிய பகுதியில் வசிக்கும் இந்த இங்கு சேவை புரிகிறார்கள். பௌதீக வளப் பற்றாக்குறை காணப்படுகிறது என்பதை ஏற்றுக் கொள்கிறேன்.

இந்த பகுதியில் பல அரச கட்டடிங்கள், தொண்டமான் பயிற்சி நிலையம் உள்ளது இவற்றை பயன்படுத்துங்கள். இதனை விடுத்து பிறிதொரு பகுதிக்கு கொண்டு செயலகத்தை கொண்டு செல்ல வேண்டாம் என்றார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles