தேர்தல் காலங்களில் பலரும் வந்து பலதைக் கூறி வாக்குக் கேட்கலாம். ஆனால் மக்களே சிறந்தவரைத் தெரிவு செய்து வாக்களிக்க வேண்டும் என்று இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் பொதுச்செயலாளரும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நுவரெலியா மாவட்ட வேட்பாளருமான சுப்பையா சதாசிவம் தெரிவித்தார்.
நுவரெலியாவில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். தொடர்ந்து கருத்துரைத்த அவர்,
வெளிமாவட்டங்களைச் சேர்ந்த பலர் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றி பெறலாம் என்ற எண்ணத்தில் பகற் கனவு காண்கின்றனர். இவர்களுக்கு வாக்களிக்க மலையக மக்கள் ஏமாளிகள் இல்லை.
மலையக மக்கள் நன்கு சிந்தித்துச் செயற்படக் கூடியவர்கள். எமது மக்களை யாரும் ஏமாற்ற முடியாது. “வெளிமாவட்டங்களிலிருந்து இங்கு வந்து வாக்குக் கேட்பவர்களுக்குமலையக மக்களைப் பற்றி என்ன தெரியும்? அவர்கள் மலையகத்துக்குச் செய்த சேவைகள் எவை? இவர்கள் தேர்தலில் வெற்றி பெறுவதற்காகப் பல பொய் பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றனர்”
என்றார்.
தலவாக்கலை நிருபர் – கேதீஸ்