பங்களாதேஷ், தலைநகர் டாக்காவில் கட்டிடமொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தபட்சம் 43 பேர்வரை பலியாகியுள்ளனர்.
தலைநகர் டாக்காவில் உள்ள உணவுவிடுதியொன்றில் வேகமாக பரவிய தீ பலர் தீ காயங்களுக்குள்ளாகியுள்ளனர்.
ஊணவகத்திலிருந்து 75 இற்குஅதிகமானவர்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர்.
இரண்டு மணிநேர போராட்டத்தி;ன் பின்னர் தீயை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்துள்ளதாக தெரிவித்துள்ள அதிகாரிகள் டாக்கா மருத்துவகல்லூரி வைத்தியசாலையில் சிறுவர்கள் உட்பட 33 பேரின் உடல்கள் உள்ளதாகவும் நகரின் மற்றுமொரு வைத்தியசாலையில் பத்து பேர் உயிரிழந்துள்ளனர் எனவும், 20 இற்கு அதிகமானவர்கள் ஆபத்தான நிலையில் உள்ளனர் என தெரிவித்துள்ளனர்.
ஏழுமாடிகளை கொண்ட கச்சிபாய் உணவகத்திலேயே தீவிபத்து ஏற்பட்டுள்ளது.
எரிவாயு கசிவு ஏற்பட்டிருக்கலாம் என தெரிவித்துள்ள அதிகாரிகள் அந்த கட்டிடத்தின் ஒவ்வொரு தளத்திலும் எரிவாயு சிலிண்டர்கள் காணப்பட்டன.
இதனால் அந்த கட்டிடம் மிகவும் ஆபத்தானதாக காணப்பட்டது எனவும் தெரிவித்துள்ளனர்.