பங்களாதேஷ் நோட்டுகளில் தேசத் தந்தை முஜிபுர் ரஹ்மான் படம் நீக்கம்

பங்களாதேஷ் கரன்சி நோட்டுகளில் தேசத் தந்தை முஜிபுர் ரஹ்மானின் படம் நீக்கப்படுகிறது. அவரது படத்துக்கு பதிலாக மத வழிபாட்டு தலங்கள், வங்க கலாச்சாரம், மாணவர் போராட்டங்கள் தொடர்பான படங்கள் அடங்கிய புதிய கரன்சிகள் அச்சிடப்பட்டு வருகின்றன.

பங்களாதேசில் இடஒதுக்கீடு நடைமுறையை எதிர்த்து கடந்த ஜூன், ஜூலையில் மாணவர் சங்கங்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தின. இதன்காரணமாக அந்த நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனா கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி பதவியை ராஜினாமா செய்துவிட்டு இந்தியாவில் தஞ்சமடைந்தார். நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு தற்போது பங்களாதேசில் ஆட்சி நடத்தி வருகிறது.

வங்கதேச கரன்சி நோட்டுகளில் (டாக்கா) அந்த நாட்டின் தேசத்தந்தை ஷேக் முஜிபுர் ரஹ்மானின் படம் அச்சிடப்பட்டு உள்ளது. புதிய அரசு பதவியேற்றுள்ள நிலையில் ரஹ்மானின் படத்தை நீக்கிவிட்டு மத வழிபாட்டு தலங்கள், வங்க கலாச்சாரம், மாணவர் போராட்டங்கள் தொடர்பான படங்கள் அடங்கிய புதிய ரூபாய் நோட்டூகளை புழக்கத்தில்விட அரசு முடிவு செய்துள்ளது.

இதுதொடர்பாக பங்களாதேஷ் முன்னணி நாளிதழான டாக்டா டிரிபியூன் வெளியிட்ட செய்தியில் கூறியிருப்பதாவது:

புதிய கரன்சி நோட்டுகளை அச்சிட வங்கதேச அரசு ஒப்புதல் வழங்கி உள்ளது. இதன்படி வங்கதேச மத்திய வங்கி சார்பில் புதிய கரன்சிகள் அச்சிடப்பட்டு வருகின்றன. புதிய நோட்டுகளில் ஷேக் முஜிபுர் ரஹ்மானின் படம் இடம் பெறாது. அவரது படத்துக்கு பதிலாக மதவழிபாட்டுத் தலங்கள், வங்க கலாச்சாரம், மாணவர் போராட்டங்கள் தொடர்பான படங்கள் இடம்பெறும்.

அடுத்த 6 மாதங்களில் புதிய கரன்சிகள் புழக்கத்தில் விடப்படும். அதாவது அடுத்த ஆண்டு ஜூன் மாதம் புதிய கரன்சிகள் அறிமுகம் ஆகும். ஏற்கெனவே புழக்கத்தில் உள்ள பழைய கரன்சிகள் செல்லும். இவ்வாறு டாக்கா டிரிபியூன் செய்தியில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

வங்கதேச தூதரக அதிகாரிகள்: இந்தியாவின் மேற்குவங்க தலைநகர் கொல்கத்தா மற்றும் திரிபுரா தலைநகர் அகர்தலாவில் வங்கதேச தூதரகங்கள் செயல்படுகின்றன. வங்கதேசத்தில் இந்துக்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதை கண்டித்து இரு தூதரகங்கள் முன்பும் தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

இதைத் தொடர்ந்து கொல்கத்தா, அகர்தலாவில் பணியாற்றிய வங்கதேச தூதரக அதிகாரிகள் நாடு திரும்ப அந்த நாட்டு அரசு அண்மையில் உத்தரவிட்டது. இதன்படி கடந்த 3-ம் தேதி அவர்கள் வங்கதேசத்துக்கு திரும்பி சென்றனர்.

Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles