பசறை சுகாதார பிரிவிற்கு உட்பட்ட பகுதிகளிலுள்ள 16 தொடக்கம் 20 வயதுக்கு உட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கும் மற்றும் பாடசாலைக்கு செல்லாத அனைவருக்கும் கொவிட்-19 தடுப்பூசி ( பைசர் ) நாளை (19/11) காலை 9.30 மணிக்கு பது / பசறை மத்திய வித்தியாலயத்தில் செலுத்தப்படவுள்ளதாகவும் இதுவரையிலும் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ளாத 16-20 வயதுக்கு உட்பட்டவர்கள் கட்டாயமாக நாளைய தினம் பசறை மத்திய வித்தியாலயத்தில் கொவிட்- 19 தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ளுமாறும் பொது சுகாதார பரிசோதகர்களின் மேற்பார்வையாளர் ஜெயகுமார் தெரிவித்தார்.
-ராமு தனராஜா-
