பசறை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதிகளில் நேற்று மாலை 6 மணி தொடக்கம் இரவு 8 மணி வரையான காலப்பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் மூவரும் போதை மாத்திரைகளுடன் மூவரும் நீதிமன்றத்தினால் பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்ட நால்வரும் பொது இடத்தில் குடிபோதையுடன் அநாகரிகமான முறையில் நடந்துகொண்ட இருவரும் பொது இடத்தில் புகைப்பிடித்தலில் ஈடுபட்ட ஒருவருமாக 13 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பசறை பொலிஸ் நிலைய உதவி பொலிஸ் அத்தியட்சகர் திலிப் த சில்வாவின் ஆலோசனையின் பேரில் பசறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி E.M.விஜயரட்ணவின் வழிகாட்டலிலேயே இச்சுற்றிவளைப்பு நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்டது.
கைது செய்யப்பட்ட அனைவரும் இன்றைய தினம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட உள்ளனர்.
ராமு தனராஜா
