பசறை விபத்து – பஸ் சாரதி பிணையில் விடுவிப்பு!

பசறை – 13 ஆவது மைல் கல்லருகே விபத்திற்குள்ளான தனியார் பஸ்சின் சாரதி 33 தினங்களுக்குப் பின்னர் பத்து இலட்ச ரூபாவிற்கான இரு சரீரப் பிணைகளில் விடுவிக்கப்பட்டார்.

பசறை – நீதிவான் நீதிமன்றத்தில் 22-04-2021ல் பிற்பகல் மேற்படி பசறை பஸ் விபத்து தொடர்பான வழக்கு, நீதிபதி சமிந்த கருணாதாச முன்னிலையில், எடுத்துக் கொள்ளப்பட்டிருந்தது.

இவ் வழக்கை பரிசீலனை செய்த நீதிபதி, தம்மிடம் சமர்ப்பிக்கப்பட்ட பிணை மனுவிற்கமைய, விபத்துக்குள்ளான பஸ் சாரதியை, பத்து இலட்ச ரூபாவிற்கான இரு சரீரப் பிணைகளில் விடுவித்தார். அத்துடன் அடுத்த மாதம் 20ந் திகதி வியாழனன்று மீளவும், பிணையில் விடுவிக்கப்பட்ட பஸ் சாரதியை பசறை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறும், நீதிபதி உத்தரவிட்டார்.

கடந்த 20ந் திகதி காலை இடம்பெற்ற இப் பஸ் விபத்தில் 14 பேர் பலியானதுடன், 32 பேர் காயங்களுக்குள்ளாகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles