பச்சை கொழுந்தின் விலை ஒரு கிலோவிற்கு 40-50 ரூபா அளவில் வீழ்ச்சியடைந்துள்ளமையால், பலாங்கொடை பிரதேசத்தில் உள்ள சிறுதேயிலைத் தோட்ட உரிமையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.பச்சைக் கொழுந்தின் விலை.வீழ்ச்சியின் காரணமாக தேயிலை உற்பத்தி வருமானம் குறைந்துள்ளதாக சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
தேயிலை உற்பத்திக்கு பயன்படுத்தும் உரத்தின் விலையை மேலும் குறைப்பதற்கு சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த ஜனவரி பெப்ரவரி மாதங்களில் 220-230 ஆகிய விலைக்கு இருந்த பச்சை கொழுந்து ஒரு கிலோவின் விலை, தற்பொழுது 170-180 ரூபாவுக்கு இடையில் குறைந்துள்ளதாக சிறு தேயிலை தோட்ட உரிமையாளர்கள் தெரிவித்தனர்.










