படை பலத்தை காட்டியது சீனா: கடுப்பில் ட்ரம்ப்!

 

அமைதி அல்லது போர் இரண்டில் ஒன்றை தேர்வு செய்ய வேண்டிய நிலையில் தற்போது உலகம் இருப்பதாக, இரண்டாம் உலகப் போரில் வெற்றி பெற்றதன் 80-ம் ஆண்டு வெற்றி விழா இராணுவ அணிவகுப்புப் பேரணியில் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் தெரிவித்துள்ளார்.

இரண்டாம் உலகப் போரின்போது ஜப்பானுக்கு எதிரான போரில் சீனா வெற்றி பெற்றதன் 80-ம் ஆண்டு வெற்றி விழா தலைநகர் பெய்ஜிங்கில் உள்ள தியானன்மென் சதுக்கத்தில் இன்று கொண்டாடப்பட்டது.

மிகப் பிரம்மாண்டமான முறையில் நடத்தப்பட்ட இந்த வெற்றி விழாவில், சீன ஜனாதிபதிஜி ஜின்பிங்கின் அழைப்பை ஏற்று ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதின், வட கொரிய ஜனாதிபதி கிம் ஜோங் உன், இந்தோனேஷிய ஜனாதபதி பிரபோவோ சுபியாண்டோ உட்பட பலர் கலந்து கொண்டனர்.

2015-க்குப் பிறகு இரண்டாவது முறையாக இத்தகைய பிரம்மாண்ட வெற்றி விழா ராணுவ அணிவகுப்புப் பேரணியை சீனா நடத்தி உள்ளது.
சுமார் 70 நிமிடங்கள் நடைபெற்ற இன்றைய பேரணியில் 50,000 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் பங்கேற்றனர். 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள், அணிவகுப்புப் பேரணியில் கலந்து கொண்டனர்.

மேலும், இதில் 100-க்கும் மேற்பட்ட போர் விமானங்கள், ட்ரோன்கள் உள்ளிட்ட அதிநவீன ராணுவ தளவாடங்கள் பங்கேற்றன. 80,000 அமைதிப் புறாக்களும் வண்ணவண்ண பலூன்களும் வானில் பறக்கவிடப்பட்டன.

மறைந்த சீன தலைவர் மா(வோ) சேதுங் அணிந்திருந்த உடையை அணிந்து கொண்டு வெற்றிப் பேரணியில் உரையாற்றிய ஜனாதிபதி ஜி ஜின்பிங், “இன்று மனிதகுலம் அமைதி அல்லது போர் ஆகிய இரண்டில் ஒன்றை தேர்வு செய்ய வேண்டிய நிலையில் உள்ளது. அதேபோல், வெற்றியா முழுமையான இழப்பா என்ற தேர்வையும் எதிர்கொள்கிறது. சீன மக்கள் வரலாற்றின் சரியான பக்கத்தில் உறுதியாக நிற்கிறார்கள்.” என தெரிவித்தார்.

அணிவகுப்பு தொடங்கியவுடன் ட்ரூத் சமூக ஊடகத்தில் தனது கருத்தை பதிவிட்ட டொனால்ட் ட்ரம்ப், “சீனா ஜப்பானிடமிருந்து சுதந்திரத்தைப் பெற அமெரிக்கா உதவியதை சுட்டிக்காட்டினார். அமெரிக்காவுக்கு எதிராக சதி செய்யும் விளாடிமிர் புதின், கிம் ஜோங் உன்னுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவியுங்கள்.” என்றும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, சீனாவின் வெற்றிப் பேரணி தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய டொனால்ட் ட்ரம்ப், இந்த அணிவகுப்பை அமெரிக்காவுக்கான சவாலாக நான் பார்க்கவில்லை என்றும் ஜி ஜின்பிங்குடன் மிகச் சிறந்த உறவை கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles