‘பட்ஜட்’டை மறந்த சம்பந்தன்! நடந்தது என்ன?

2022 ஆம் நிதியாண்டுக்கான பாதீட்டு விவாதத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் இம்முறை ஒருநாள்கூட உரையாற்றவில்லை.

வழமையாக வரவு- செலவுத் திட்டத்தின் 2ஆம் மற்றும் 3ஆம் வாசிப்புமீதான விவாதங்களின்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் எம்.பி. கட்டாயம் உரையாற்றுவார்.

வெளிவிவகாரம் மற்றும் பாதுகாப்பு அமைச்சுகளுக்கான ஒதுக்கீடு தொடர்பான குழுநிலை விவாதத்தில் சம்பந்தன் உரையாற்றி வந்ததுடன், கூட்டமைப்புக்கு ஒதுக்கப்படும் முழு நேரத்தையும் சம்பந்தன் எடுத்துக்கொள்வார். விரிவான விளக்கத்துடன் அவரின் உரைகள் இடம்பெறும்.

எனினும், உடல்நலக்குறைவால் இம்முறை அவர் உரையாற்றவில்லை. இறுதி வாக்கெடுப்பன்று சபைக்கு வருகை தந்திருந்த அவர் எதிராக வாக்களித்தார்.

Related Articles

Latest Articles