பட்ஜட் கூட்டத்தொடரின்போது ‘பல்டி’கள் அரங்கேறும் அறிகுறி!

ஐக்கிய மக்கள் சக்தி பக்கம் உள்ள இரு  நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசுடன் இணைவதற்கு தயாராக இருப்பதாக அறியமுடிகின்றது. இதற்கான இரகசிய பேச்சுகள் ஏற்கனவே ஆரம்பமாகியுள்ள நிலையில், இருவரும் ஜனாதிபதியை சந்தித்து பேச்சு நடத்தியுள்ளதாகவும் தெரியவருகின்றது. 

2023 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் அடுத்த மாதம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு, டிசம்பரில் வாக்கெடுப்புக்கு விடப்படவுள்ளது. அவ்வேளையிலேயே இவர்கள் அரசு பக்கம் தாவக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Related Articles

Latest Articles