பட்டலந்த தொடர்பில் நடவடிக்கை எடுத்திருந்தால் இறுதிப்போரில் குற்றமிழைக்க அஞ்சி இருப்பார்கள்

‘பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால், அந்தபயத்தில் இறுதிக்கப்பட்டபோரின்போது மனித குலத்துக்கு எதிரான செயற்பாடுகள் மற்றும் போர்க்குற்றங்களில் ஈடுபட்டிருக்கமாட்டார்கள்.” என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம் தெரிவித்தார்.

பட்டலந்த வதை முகாம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு கூறினார்.

‘ பட்டலந்த அறிக்கை தொடர்பில் விவாதம் நடத்துவதுடன் மட்டும் நின்றுவிடக்கூடாது. குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக முறையான விசாரணை நடத்தப்பட்டு, குற்றவாளிகள் சட்டத்தின்முன் நிறுத்தப்பட்டு பொறுப்புக்கூற வைக்க வேண்டும். அப்போதுதான் இப்படியான குற்றங்கள் மீள் நிகழலாம் இருக்கும்.” எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இறுதிக்கப்பட்டபோரின்போது இதேமாதிரியான மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள், நீதிக்கு புறம்பான கொலைகள், காணாமல் ஆக்கப்படுதல், உறவுகளால் கையளிக்கப்பட்டவர்கள் வீடு திரும்பாமை, போர்க்குற்றங்கள் உட்பட பல விடயங்கள் தொடர்பிலும் அறிகைகள் உள்ளன.
இவற்றை எடுத்து நடவடிக்கை எடுப்பதற்கு முற்படும்வேளை, இந்நாட்டுக்காக போராடியவர்கள் காட்டிக்கொடுக்கப்படுகின்றனர் என இங்குள்ள அரசியல்வாதிகள் கூறுகின்றனர்.

எனவே, அறிக்கைகளை முன்வைத்து பயனில்லை. உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அவ்வாறு பட்டலந்த அறிக்கை தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால் இறுதிபோரின்போது போர்க்குற்றம் செய்தவர்கள், மனித குலத்தக்கு எதிரான குற்றம் செய்தவர்கள் பயத்தில் செய்திருக்கமாட்டார்கள்.” எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் சத்தியலிங்கம் குறிப்பிட்டார்.

எனவே, சட்டரீதியிலான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு மீள நிகழாமை உறுதிப்படுத்தப்பட வேண்டும். அரசியல் காரணங்களுக்காக மட்டும் அறிக்கைகள் புறட்டப்படக்கூடாது.” – எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles