ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்கியுள்ள தமது கட்சியின் மாவட்ட தலைவர்களின் பதவிகளை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி பறித்துள்ளது. அதற்கு பதிலாக புதிய மாவட்ட தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதன்படி கம்பஹா மாவட்ட மொட்டு கட்சித் தலைமைப் பதவியிலிருந்து அமைச்சர் பிரசன்ன ரணதுங்க நீக்கப்பட்டு, அந்த பதவி இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த நியமிக்கப்பட்டுள்ளார்.
அனுராதபுரம் மாவட்டத்தின் மொட்டு கட்சித் தலைமைப் பதவியிலிருந்து எஸ்.எம். சந்திரசேன நீக்கப்பட்டு, அந்த பதவி நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவிற்கு வழங்கப்பட்டுள்ளது.
மாத்தறை மாவட்டத் தலைமைப் பதவியிலிருந்து அமைச்சர் கஞ்சன விஜேசேகர நீக்கப்பட்டு, மாவட்டத்தின தலைவராக நிபுண ரணவக்க நியமிக்கப்பட்டுள்ளார்.
காலி மாவட்டத்தின் மொட்டு கட்சித் தலைமைப் பதவியிலிருந்து அமைச்சர் ரமேஸ் பத்திரண நீக்கப்பட்டு, அந்த பதவி நாடாளுமன்ற உறுப்பினர் இராஜாங்க அமைச்சர் மொஹான் பிரியதர்சன சில்வாவிற்கு வழங்கப்பட்டுள்ளது.
