பதவி விலகினாரா, விலக்கப்பட்டாரா? வெளியான புதிய தகவல்

அநுராதபுரம் மற்றும் வெலிக்கடை சிறைச்சாலைகளில் இடம்பெற்ற சம்பவங்களுக்காக, சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் பகிரங்கமாக மன்னிப்புகோருகின்றேன் – என்று நீதி அமைச்சர் அலிசப்ரி தெரிவித்துள்ளார்.

இவ்விரு சிறைச்சாலைகளில் இடம்பெற்றதாகக் கூறப்படும் சம்பவத்தையடுத்து, ஜனாதிபதியை தொடர்புகொண்டு, லொஹான் ரத்வத்தவை பதவி விலக்குமாறு நாமே கோரினோம். இதற்கமையவே அமைச்சு பதவியில் இருந்து அவரை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

இப்படியான சம்பவங்கள் இடம்பெற்றிருக்ககூடாது. அவற்றை அனுமதிக்கவும் முடியாது. எனது அமைச்சின்கீழ் வருகின்ற இராஜாங்க அமைச்சர் ஒருவர் இவ்வாறு செயற்பட்டுள்ளமை என்னையும் அசௌகரியத்துக்கு உட்படுத்தியுள்ளது எனவும் நீதி அமைச்சர் கவலை வெளியிட்டுள்ளார்.

<iframe width=”683″ height=”384″ src=”https://www.youtube.com/embed/TAjOIl9PtqI” title=”YouTube video player” frameborder=”0″ allow=”accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture” allowfullscreen></iframe>

Related Articles

Latest Articles