ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பியான முஜிபூர் ரஹ்மான் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இன்று இராஜினாமா செய்தார்.
உள்ளாட்சிசபைத் தேர்தலில் கொழும்பு மாநகரசபைக்கு ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் மேயர் வேட்பாளராக போட்டியிடுவதற்கே இவ்வாறு பதவி விலகுவதாக அவர் நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.
அத்துடன், தனக்கு வாக்களித்து சபைக்கு அனுப்பி வைத்த கொழும்பு மாவட்ட மக்களுக்கும் நன்றி தெரிவித்தார்.
