பதில் பிரதமராக தினேஷ்? சமலின் பெயரும் பரிந்துரை!

2022  ஜனவரி ஆரம்பத்தில் அமைச்சரவை மறுசீரமைப்பு இடம்பெறுவது உறுதியாகியுள்ளதென அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.

இதன்படி ஜனவரி 08, 10 மற்றும் 18 ஆகிய மூன்று நாட்களில் ஏதேனுமொரு தினத்தில் அமைச்சரவை மறுசீரமைப்பு இடம்பெறும் எனவும், இதற்கான ஏற்பாடுகள் இறுதிப்படுத்தப்பட்டுள்ளன எனவும் தெரியவருகின்றது.

முக்கியமான சில அமைச்சு பதவிகள் கைமாறப்படவுள்ளதுடன்,  ஒரு சிலருக்கு கூடுதல் பொறுப்புகள் கையளிக்கப்படவுள்ளதெனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேவேளை, பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கு மருத்துவ தேவைகளின் நிமித்தம் ஓய்வு தேவைப்படுவதால், பதில் பிரதமர் ஒருவரையும்  நியமிப்பது தொடர்பில் ஆராயப்பட்டுவருகின்றது.

பஸில் ராஜபக்ச இரட்டை குடியுரிமையை இன்னும் துறக்காததால், சமல் ராஜபக்ச அல்லது தினேஷ் குணவர்தன ஆகிய இருவரில் ஒருவர் பதில் பிரதமராக நியமிக்கப்படுவதற்கான சாத்தியமும் காணப்படுகின்றது.  பஸிலுக்கு எதிர்ப்புகள் இல்லாவிட்டால் அவரே பதில் பிரதமர் பதவியை வகிப்பாரெனவும் கூறப்படுகின்றது.

Related Articles

Latest Articles