பதுளையில் ஐஸ் போதைப்பொருளுடன் நபரொருவர் கைது!

பதுளையில் ஐஸ் போதைப் பொருளுடன் நபரொருவர் விசேட அதிரடிப்படையினரால் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளார்.

பசறை, ஆக்கரத்தன்னை விசேட அதிரடிப் படை புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய, பதுளை வீரியபுர பகுதியில் உள்ள வீடொன்றில் சோதனைக்கு உட்படுத்திய போது வீட்டில் மறைத்து வைத்திருந்த 65கிராம் 120 மில்லி கிராம் ஐஸ் போதைப் பொருளை மீட்டுள்ளனர்.

அத்தோடு 56 வயதுடைய வீரியபுர பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் விசேட அதிரடிப் படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபர் பதுளை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். கைப்பற்றப்பட்டுள்ள ஐஸ் போதைப்பொருளும் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபரிடம் விசாரணைகளை மேற்கொண்டு வரும் பதுளை பொலிஸார் இன்றைய தினம் பதுளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தனர்

ராமு தனராஜா

Related Articles

Latest Articles