பதுளையில் ஹெரோயின் போதைப்பொருளுடன் பெண் உட்பட நால்வர் கைது!

பதுளை பகுதியில் ஹெரோயின் போதைப் பொருள்ளுடன் பெண் ஒருவரும் மூன்று ஆண்களும் நேற்று மாலை (24) கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பதுளை பஹலகம, பதுலுபிட்டிய மற்றும் நெலும்கம பிரதேசங்களில் வசிக்கும் 61, 67, 68 மற்றும் 55 வயதுடைய உறவினர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

61 வயதான சந்தேகநபர் கொழும்பில் இருந்து போதைப்பொருள் கொண்டு வருவதாக பதுளை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய 61 வயதான சந்தேகநபர் பதுளையின் புறநகர் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டதாகவும், அவரிடம் இருந்து மறைத்து வைக்கப்பட்டிருந்த 6600 மில்லிகிராம் ஹெரோயின் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்

இதன் போது அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் மேலும் மூவர் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்

கைதுசெய்யப்பட்ட மூவரிடம் இருந்து ஒருவரிடம் 5730 மில்லிகிராம் ஹெரோயின் இருந்ததாகவும், மற்ற இருவரிடம் 120 மற்றும் 90 மில்லிகிராம் ஹெரோயின் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்

பதுளை பிரதேச சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் வசந்த கந்தேவத்த, பொலிஸ் அத்தியட்சகர் புத்திக குணசேகர மற்றும் பதுளை விசேட புலனாய்வு பிரிவு பொறுப்பதிகாரி பிரபோப சர்மிந்த பிரியந்த ஆகியோரின் பணிப்புரையின் பேரில், போசா திலகரத்ன (54100), போசா சுஜீவ (46592), போசா திஸாநாயக்க (74416), 74503), பொகோ வீரசிங்க (85557), கபோகோ செவ்வந்தி (7865) மற்றும் பொகோரி ரத்நாயக்க (14655) ஆகிய அதிகாரிகள் குறித்த சுற்றி வளைப்பை மேற்கொண்டு சந்தேக நபர்களை கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்

சந்தேக நபர்களிடம் விசாரணைகளை மேற்கொண்டதன் பின்னர் பதுளை நீதிவான் நீதிமன்றில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ராமு தனராஜா

Related Articles

Latest Articles