பதுளை இரட்டைக்கொலை – வெளியாகும் பகீர் தகவல்கள்…!

பதுளை, பசறை வீதி, ஹிங்குருகமுவ காத்தான் லயன் பகுதியில் இடம்பெற்ற இரட்டைக் கொலைச் சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

பதுளை – வீரியபுர பகுதியைச் ​சேர்ந்த 33 வயதான சந்தேகநபர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் முச்சக்கர வண்டி சாரதி எனவும் கொலை செய்யப்பட்ட பெண்ணிடம் கடனாகப் பெற்றிருந்த 20,000 ரூபா பணத்தை மீளச் செலுத்தாமையால் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக இந்தக் கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கொலை செய்வதற்கு முன்னர் குறித்த பெண்களை அச்சுறுத்தி தங்க நகைகளை பெற்றுக்கொண்ட சந்தேகநபர், அவற்றை அடகு வைத்துள்ளதாக பொலிஸார் கூறினர்.

பதுளை, பசறை வீதி, ஹிங்குருகமுவ காத்தான் லயன் பகுதியில் கடந்த சனிக்கிழமை காலை 2 பெண்கள் வெட்டிக் கொலை செய்யப்பட்டதுடன், மற்றுமொரு பெண் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பதுளை தலைமையக பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles