பதுளை ரொக்கில் அருள்மிகு ஸ்ரீ காளியம்மன் தேவஸ்தானத்தில் ஆடிப்பூர பெருவிழா

பதுளை ரொக்கில் அருள்மிகு ஸ்ரீ காளியம்மன் தேவஸ்தானத்தில் எதிர்வரும் 1ம் திகதி ஆடிப்பூர பெருவிழா வெகு விமர்சையாக நடைபெறவுள்ளது.

அன்றைய தினம் ஸ்ரீ காளியம்மனுக்கு விசேட அபிஷேகம், சங்காபிஷேகம்உள்ளிட்;டு வசந்த மண்டப பூஜைகள் இடம் பெற்று, அம்மனுக்கு ருது சோபனநிகழ்வு நடைபெறும்.

அதைத்தொடர்ந்து ஸ்ரீ காளியம்மன் அலங்கரிக்கப்பட்ட சிங்க வாகன பீடத்தில் எழுந்தருளி, உள்வீதி மற்றும் வெளி வீதி உலா வந்துஅடியார்களுக்கு அருள்பாலிக்கவுள்ளார்.

இறுதியில், அடியார்களுக்கு அன்னதானம் வழங்கப்படும்.

மேற்படி விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும், தேவஸ்தான பரிபாலன சபையினர் துரிதமாக மேற் கொண்டுள்ளனர்.

Related Articles

Latest Articles