பதுளை, மஹியங்கனை வீதியில் 5 ஆம் கட்டைப் பகுதியில் இன்று கihல பஸ்ஸொன்று விபத்துக்குள்ளானதில் இருவர் பலியாகியுள்ளனர். மேலும் 39 பேர் காயமடைந்துள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.
கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் உள்ள மாணவர்கள் மஹியங்கனை பக்கமாக சுற்றுலா சென்றவேளையிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
குறித்த விபத்து இடம்பெறும் போது பஸ்ஸில் 36 மாணவர்களும் விரிவுரையாளர்கள் இருவரும் , இராணுவ அதிகாரிகள் இருவரும் சாரதி உட்பட பேருந்தில் 41பேர் இருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இதில் 39 பேர் வரை பதுளை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர். இவர்களுள் சிலர் அதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் இவர்களின் சிலரது நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் வைத்தியசாலையின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மேலதிக விசாரணைகளை பதுளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
ராமு தனராஜா