பப்புவா நியூ கினியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

பப்புவா நியூ கினியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

பப்புவா நியூ கினியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

பசிபிக் பெருங்கடலின் நெருப்பு வளையம் என்று அழைக்கப்படும் பப்புவா நியூ கினியா தீவானது, தீவிர நில அதிர்வு மண்டலத்தில் வரையறுக்கப்பட்டுள்ளது.

இங்கு ஏற்படும் நிலநடுக்கம் அவ்வப்போது பெரிய அளவிலான சேதத்தை ஏற்படுத்தும்.

இந் நிலையில் பப்புவா நியூ கினியாவில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் 6.2 ஆக பதிவாகி உள்ளது.

நிலநடுக்கம் ஏற்பட்டதை அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் உறுதிப்படுத்தி இருக்கிறது. நிலநடுக்கத்தின் போது ஏதேனும் பாதிப்புகள், சேதங்கள் ஏற்பட்டதா என்பது பற்றிய எந்த தகவல்களும் வெளியிடப்படவில்லை.

சமீபத்தில் மியான்மர் மற்றும் தாய்லாந்து நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் ஆயிரக்கணக்கான பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles