பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் தேவையான திருத்தங்களைச் செய்து பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என இன்று (28) பாராளுமன்றத்தில் உரையாற்றும் போது நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அதற்கிணங்க, யார் வேண்டுமானாலும் எழுத்துமூலமான கருத்துக்களை சமர்ப்பிக்கலாம் மற்றும் சம்பந்தப்பட்ட சட்டமூலத்திற்கான விடயங்கள் குறித்து கலந்துரையாடலாம் என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.










