பயணத்தடை மீள் பரிசிலனை குறித்து சாதகமான தீர்வு – சவேந்திர சில்வா நம்பிக்கை

அமெரிக்க இராஜாங்கச்செயலாளர் இலங்கையில் வைத்து விடுத்த அறிவிப்பு நடைமுறைக்குவரும் என நம்புகின்றேன் – என்று இலங்கை இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா  தெரிவித்தார்.

இலங்கைக்கு பயணம் மேற்கொண்டிருந்த அமெரிக்க இராஜாங்கச்செயலாளர் நேற்று (28) ஊடகவியலாளர் சந்திப்பிலும் பங்கேற்றார். இதன்போது  இராணுவத் தளபதி சவேந்திர சில்வாவுக்கு எதிராக அமெரிக்க அரசாங்கம் விதித்துள்ள பயணத் தடை தொடர்பில் மீள்பரிசீலனை செய்யப்படும் என்ற அறிவிப்பை அவர் விடுத்திருந்தார்.

இது தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே இராணுவத் தளபதி மேற்கண்டவாறு நம்பிக்கை வெளியிட்டார்.

” அமெரிக்க என்பது பலம்பொருந்திய நாடு, இராஜாங்கச் செயலாளர் பதவியை வகிப்பவரும் பலம் பொருந்திய நபராகவே கருதப்படுவார். எனவே, அப்படியான ஒருவர் வழங்கிய அறிவிப்பு தொடர்பில் சாதகமான பெறுபேறு கிடைக்கும் என நேர்கோணத்தில் சிந்திப்போம். அது எவ்வாறு நடைமுறைக்கு வரும் என்பது தொடர்பிலும் நல்லதாகவே யோசிப்போம்.” – என்றும் சவேந்திர சில்வா குறிப்பிட்டார்.

Related Articles

Latest Articles