“பயந்து ஓடமாட்டேன் – நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதிர்கொள்ள தயார்” – கெஹலிய

எதிர்க்கட்சிகள் கொண்டு வர உத்தேசித்துள்ளதாக கூறப்படும் நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு முகம் கொடுக்க தான் தயாரென சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

சவாலுக்கு பயந்து பொறுப்பிலிருந்து விலகி தப்பியோடும் நபர் தான் அல்லவெனவும் அவர் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன குண்டசாலை தொகுதி குழுக் கூட்டத்தில் உரையாற்றும் போதே நேற்று (16) அமைச்சர் இதனை தெரிவித்தார். சுகாதாரத்துறை

தொடர்பாக திட்டமிட்டு பொய் பிரசாரங்களை சிலர் மேற்கொண்டு வருவதாகவும் அவை அனைத்தையும் நிரூபிக்கவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

தாம் இதுவரை 08 அமைச்சுப் பதவிகளை வகித்துள்ளதாகவும் சுகாதார அமைச்சராக நாட்டில் 22 இலட்சம் மக்களின் சுகாதாரம் தொடர்பான பொறுப்பை நிறைவேற்றுவதற்கு அர்ப்பணிப்புடன் உள்ளதாகவும் தெரிவித்தார்.

Related Articles

Latest Articles