பறித்தார் ரணில் – கொடுத்தார் சஜித்! சூடுபிடிக்கும் ‘யானைச்சண்டை’!!

சஜித் அணியின் நாவலப்பிட்டிய தொகுதி அமைப்பாளரும், நாவலப்பிட்டிய நகரசபையின் தலைவராக செயற்பட்டவருமான சசங்க சம்பத், ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழுவுக்கு உள்வாங்கப்பட்டுள்ளார்.

இதற்கான நியமனக் கடிதத்தை கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று வழங்கி வைத்தார்.

சஜித்துக்கு ஆதரவு வழங்கிய சசங்க சம்பத்தை, நகர சபை தலைவர் பதவியிலிருந்து ஐ.தே.க. நீக்கியது. இது தொடர்பான வர்த்தமானியும் நேற்று வெளியானது.

இந்நிலையிலேயே அவருக்கு பதவி உயர்வு வழங்கும் வகையில் சஜித் அணி இந்த முடிவை எடுத்துள்ளது.

Related Articles

Latest Articles