கேகாலை மாவட்டத்துக்குட்பட்ட யட்டியாந்தோட்டை, பனாவத்த தோட்டம் இலக்கம் – 02 பிரிவில் உள்ள லயன் குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் இருவர் பலியாகியுள்ளனர்.
இன்று அதிகாலை ஒரு மணியளவிலேயே குறித்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
60 வயதான கணவரும், 50 வயதான மனைவியுமே தீ விபத்தில் உடல் கருகி பலியாகியுள்ளனர்.
அத்துடன், லயன் குடியிருப்பில் உள்ள 5 வீடுகள் முற்றாக தீக்கிரையாகியுள்ளன.
தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.