‘ பலமானதொரு எதிர்க்கட்சி கட்டியெழுப்படும்.” என்று முன்னாள் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் நடைபெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
‘ நான் அரசியலில் இருந்து ஓய்வுபெறவில்லை. பொதுவெளிக்கு வராவிட்டாலும் அரசியல் தொடர்கின்றது. பலமானதொரு எதிரணி கட்டியெழுப்படும்.” எனவும் அவர் கூறியுள்ளார்.
அதேவேளை மேற்படி சந்திப்பு தொடர்பில் கருத்து வெளியிட்ட அநுர பிரியதர்சன யாப்பா,
‘ மக்கள் ஒத்துழைப்புடன்தான் ஆட்சியை மாற்ற வேண்டும். அதற்காக நாம் ஒன்றிணைய வேண்டும். தேர்தலை வெற்றிகரமாக எதிர்கொள்ள வேண்டும். அரசியல் ரீதியிலான ஒற்றுமை அவசியம்.” – என்று குறிப்பிட்டுள்ளார்.
‘ அரசாங்கத்தின் ஒடுக்குமுறை தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. இதற்கு எதிராக கூட்டு நடவடிக்கை எடுப்பது பற்றி பேசப்பட்டது. நாடாளுமன்றத்துக்கு வெளியில் உண்மையான அரசியலை முன்னெடுக்க
தீர்மானிக்கப்பட்டுள்ளது.” என்று இச்சந்திப்பில் பங்கேற்ற உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
