பலாங்கொடை – ஹட்டன் பிரதான வீதியில் பின்னவல இரட்டை வளைவு பள்ளத்தாக்கு பகுதியில் வேன் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஏழு பேர் காயம் அடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்கள பலாங்கொடை வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சிவனொளிபாத மலைக்கு யாத்திரை சென்று வீரகெட்டிய பகுதியை நோக்கி பயணித்துக்கொண்டிருக்கையிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்து தொடர்பில் விசாரணைகளை பின்னவல காவற்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
எம்.எப்.எம். அலி










