பல்டி அடித்த மதியுகராஜவுக்கு பதிலடி கொடுத்த ஜீவன்

நாட்டில் எதிர்வரும் காலங்களில் இடம்பெறவுள்ள தேர்தலில் ஓடி போனவர்களுக்கு வாக்களிக்காது , நின்று சாதித்தவர்களுக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும்- என நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் (14) கண்டியில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு தனதுரையில் தெரிவித்தார்.

இதொகாவின் சிரேஸ்ட உறுப்பினரான மதியுகராஜா, ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்துள்ள நிலையிலேயே ஜீவன் இவ்வாறு குறிப்பிட்டார்.
ஜீவன் மேலும் கூறியதாவது,

“ நாடும், நாட்டு மக்களும் கடந்த காலங்களை விட தற்போது நிம்மதியுடன் வாழக்கூடிய நிலையை ஜனாதிபதி மக்களுக்கு தந்துள்ளார்.
பொருளாதார நெருக்கடிக்கு உள்ளான நிலையிலும் ஏழைகள் பயன்பெறும் வகையில் அஸ்வெசும நலன் புரி திட்டத்தை ஜனாதிபதி ரனில் விக்கிரமசிங்க கொண்டு வந்துள்ளார்.

அதேபோல நாட்டில் 20 லட்சத்திற்கு அதிகமான மக்களுக்கு உரிமை காணிபத்திரம் ஜனாதிபதியின் வேலைத்திட்டம் ஊடாக வழங்கப்பட்டுள்ளது.

இறுதியாக ஒன்றை தெரிவித்து கொள்கிறேன் ஒரு தேர்தல் வரும் போது மக்களுடைய பலம் என்னவென்று ஒவ்வொறுவருக்கும் தெரிந்தாக வேண்டும். எதிர்காலத்தில் நடைபெறவுள்ள தேர்தலை பலர் அவரவர் இமேஜை பொருத்து சித்தரிக்கப்பார்கின்றனர்.

இந்த நிலையில் முதலில் நாம் மக்களுக்கு என்ன செய்துள்ளோம் என்பதை உணர வேண்டும்.  வாக்காளர் மக்களுக்கு மறதி ஒரு பிரச்சினையாக காணப்படுகிறது. ஆனால் மக்கள்  நாட்டில் வரிசையில் நின்றனர் என்பதை மறந்துவிடமாட்டார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. ஆகையால் வரப்போகும் தேர்தலில் ஓடிப்போனவர்களுக்கு வாக்களிக்காது நின்று சாதித்தவர்களுக்கு வாக்களிக்க வேண்டும். என்றார் ஜீவன்

-ஆ.ரமேஸ்-

Related Articles

Latest Articles