பள்ளமடு-விடத்தல் தீவு பிரதான வீதிக்கு அருகில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்பு

தகவல் ராயூகரன் – மன்னார் நிருபர்
மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள பள்ளமடு-விடத்தல் தீவு பிரதான வீதிக்கு அருகில் இன்று திங்கட்கிழமை (7) காலை இளம் குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சடலமாக மீட்கப்பட்டவர் சன்னார் கிராமத்தைச் சேர்ந்த 2 பிள்ளைகளின் தந்தையான கே.பாஸ்கரன் (வயது-33) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
குறித்த குடும்பஸ்தர் தனது வீட்டில் இருந்து நேற்று ஞாயிற்றுக்கிழமை (6) விடத்தல் தீவு கிராமத்திற்குச் சென்று விட்டு மீண்டும் தனது வீடு நோக்கி மோட்டார் சைக்கிலில் சென்றுள்ளார்.
இந்த நிலையிலே குறித்த குடும்பஸ்தர் இன்று திங்கட்கிழமை(7) காலை குறித்த பகுதியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சடலத்திற்கு அருகில் இருந்து அவர் பயணித்த மோட்டார் சைக்கிலும் மீட்கப்பட்டுள்ளது.
சம்பவ இடத்திற்கு வந்த அடம்பன் பொலிஸார் விபத்தா அல்லது கொலையா? என்பது குறித்து விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மன்னார் திடீர் மரண வசாரணை அதிகாரி எஸ் சி குனகுமார் 12:40 மணியளவில் வருகைதந்து பார்வையிட்டு பின்னர் உடலம் மன்னார் வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles