பஸிலை கைது செய்ய சர்வதேச சிவப்பு பிடியாணை பிறப்பிக்க நடவடிக்கை

முன்னாள் அமைச்சர் பஸில் ராஜபக்சவைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துமாறு கோட்டை நீதவான் பசன் அமரசேன குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணை பிரிவிற்கு இன்று(14) உத்தரவிட்டார்.

சந்தேகநபர் தொடர்பில் சர்வதேச பொலிஸார் ஊடாக நடவடிக்கை எடுப்பதற்காக சிவப்பு அறிவித்தலுக்கான பிடியாணையை ஆங்கிலம் மற்றும் சிங்கள மொழிகளில் பிறப்பிக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் பசன் அமரசேன அறிவித்துள்ளார்.

சுற்றுலா அபிவிருத்தி பணியகத்தின் நிதியை முறையற்ற வகையில் பயன்படுத்திய சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தால் முன்வைக்கப்பட்ட விடயங்களை ஆராய்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

2014ஆம் ஆண்டு சுற்றுலா அபிவிருத்தி பணியகத்திற்காக ஒதுக்கப்பட்டிருந்த 7.8 மில்லியன் ரூபா பணத்தை சுற்றுலா அபிவிருத்தி பணிகளுக்கு பயன்படுத்தாது ஊவா மாகாண சபை தேர்தல் பிரசாங்களுக்காக 12,000 T-shirt களை அச்சிட்டு வழங்கிய சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணை பிரிவு நீதிமன்றத்தில் அறிக்கையிட்டிருந்தது.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles