பஸ் கட்டண அதிகரிப்பு:ரயில் பயணிகளின் எண்ணிக்கை சடுதியாக அதிகரிப்பு

மேலதிக ரயில்கள் மற்றும் ரயில் பெட்டிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

பஸ் கட்டண அதிகரிப்பினால் ரயில்களில் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்து வருவதை கருத்திற்கொண்டு, இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக ரயில்வே பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்தார்.

அத்தியாவசிய ஊழியர்களை ஒப்பந்த அடிப்படையில் இணைத்துக்கொள்வதற்கும் பொது நிர்வாக சேவை ஆணைக்குழுவின் அனுமதி பெறப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

எரிபொருள் விலை அதிகரிப்பினால் ரயில்வே திணைக்களத்திற்கு நாளாந்தம் சுமார் 15 மில்லியன் ரூபா நட்டம் ஏற்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles