‘பாகிஸ்தான் பயங்கரவாதத்தின் மையம்’ – ஜெய்சங்கர் பதிலடி!

இந்திய பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்த பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சருக்கு , இந்திய வெளிவிவகார அமைச்சர் பதிலடி கொடுத்துள்ளார்.

ஐ.நா.சபையில் இந்தியா தலைமையில் உலக பயங்கரவாத தடுப்பு வழிமுறைகள் என்ற தலைப்பில் விவாத நிகழ்ச்சி நடந்தது.

இந்த நிகழ்ச்சிக்கு பிறகு ஐ.நா. சபையில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது, இந்தியாவை விட எந்த நாடும் பயங்கரவாதத்தை சிறப்பாக பயன்படுத்தியதில்லை என்று பாகிஸ்தான் வெளியுறவுத் துறை இணை மந்திரி ஹினா ரபானி ஹர் கூறியது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

” பாகிஸ்தான் மந்திரி கூறியதை நான் படித்தேன். கடந்த 2011-ம் ஆண்டு நடந்த சம்பவத்தை நினைவு கூற விரும்புகிறேன். அப்போதைய அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி ஹிலாரி கிளிண்டன் பாகிஸ்தானுக்கு பயணம் மேற்கொண்டார். அப்போது ஹினா ரபானி ஹர் மந்திரியாக இருந்தார்.

அவர் அரசில் ஹிலாரி கிளிண்டன் கூறும் போது, உங்கள் வீட்டின் கொல்லை புறத்தில் பாம்புகளை வைத்திருந்தால் அது உங்கள் அண்டை வீட்டாரை மட்டும் கடிக்கும் என்று நீங்கள் எதிர் பார்க்க கூடாது. அது உங்களையும் கடிக்கும். ஆனால் சிறந்த அறிவுரைகளை பாகிஸ்தான் விரும்பாது என்று கூறினார். எவ்வளவு காலத்திலும் இதை (பயங்கரவாதம்) செய்வோம் என்று நீங்கள் கேள்வி கேட்கும் போது அதை நீங்கள் தவறான அமைச்சரிடம் கேட்கிறீர்கள் என்பது உங்களுக்கு தெரியுமா?

ஏனென்றால் பாகிஸ்தான் எவ்வளவு காலம் பயங்கரவாதத்தை நடைமுறைப்படுத்த விரும்புகிறது என்பதை பாகிஸ்தான் மந்திரிகள் தான் உங்களுக்கு சொல்வார்கள். உலகமே பாகிஸ்தானை பயங்கரவாதத்தின் மையமாக பார்க்கிறது. பயங்கரவாதம் எங்கிருந்து வெளிப்படுகிறது என்பதை உலகம் மறந்து விடவில்லை. பாகிஸ்தான் தனது செயலை சுத்தப்படுத்தி நல்ல அண்டை நாடாக இருக்க முயற்சிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles