சிசு சரிய பஸ்கள் இன்று முதல் வழமை போன்று இயங்கும் என இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.
புதிய பாடசாலைத் தவணை ஆரம்பமாகியுள்ள நிலையில், சிசு சரிய பஸ்களை அதிகூடிய எண்ணிக்கையில் சேவையில் ஈடுபடுத்த எதிர்பார்த்துள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் பிரதிப் பொது முகாமையாளர் பண்டுக ஸ்வர்ணஹன்ச தெரிவித்துள்ளார்.










