பாராளுமன்ற அமர்வு ஒத்திவைக்கப்படாது – சபாநாயகர் அறிவிப்பு!

இரண்டாம் உலகப்போரின்போது லண்டன் நகரில் குண்டுமழை பொழிந்தபோதுகூட பாராளுமன்றம் கூடியது. எனவே, எக்காரணம்கொண்டு பாராளுமன்ற அமர்வு ஒத்திவைக்கப்படாது – என்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.

பாராளுமன்றம் இன்று (20) முற்பகல் 10 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடியது.இதன்போது ஒழுங்குப்பிரச்சினையொன்றை எழுப்பிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச,

” முகக்கவசம் அணிதல், சமூகஇடைவெளியை பேணுதல் உள்ளிட்ட சுகாதார நடைமுறைகளை கட்டாயப்படுத்தி சுகாதார அமைச்சால் புதிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. அத்துடன், விதிமுறைகளை மீறினால் தண்டனையும், தண்டப்பணமும் அறவிடப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே, குறித்த வர்த்தமானி அறிவித்தலில் உள்ள ஏற்பாடுகளின் பிரகாரம் சபைக்குள் சமூக இடைவெளி இல்லை. எனவே, சபை அமர்வுகளை தற்காலிகமாக இடைநிறுத்தியாவது சமூக இடைவெளியை பேணும் விதத்தில் கதிரைகளை ஒதுக்கி சபை அமர்வை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கவும்.” – என்று கோரிக்கை விடுத்தார்.

இதற்கு பதிலளித்த சபாநாயகர்,

” இரண்டாம் உலகப்போரின்போது லண்டன் நகருக்கு குண்டுமழை பொழிந்த தருணத்தில்கூட பாராளுமன்றம் கூடியது. எனவே, பாராளுமன்றம் ஒத்திவைக்கப்படாது. ” – என்று திட்டவட்டமாக அறிவித்தார்.

Related Articles

Latest Articles