காலஞ்சென்ற முன்னாள் இராஜாங்க அமைச்சர் பாலித தெவரப்பெருமவின் இறுதிக்கிரியைகள் எதிர்வரும் வெள்ளிக்கிழமை பிற்பகல் 2 மணியளவில் நடைபெறவுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.
களுத்துறை, மத்துகமவில் உள்ள தனது வீட்டு தோட்டத்தில் வைத்து நேற்று மின்சாரம் தாக்கி பாலித தெவரப்பெரும உயிரிழந்தார்.
1960 ஆம் ஆண்டு மே 3 ஆம் திகதி பிறந்த பாலித தெவரப்பெரும, மத்துகம பிரதேச சபை ஊடாக அரசியல் பயணத்தை ஆரம்பித்தார்.
மேல் மாகாணசபை உறுப்பினராகவும் இருந்தார். 2010 இல் ஐக்கிய தேசியக் கட்சி ஊடாக நாடாளுமன்றம் தெரிவானார். இராஜாங்க அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார்.