“பின்கதவால் அல்ல முன் கதவால்தான் பதவிக்கு வருவார் மஹிந்த” – மொட்டு கட்சி வழங்கியுள்ள விளக்கம்

” அரசியல் சூழ்ச்சிமூலம் மஹிந்த ராஜபக்சவை பிரதமராக்க வேண்டிய எந்தவொரு தேவைப்பாடும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கு கிடையாது. மக்கள் ஆசியுடன்தான் மஹிந்த பிரதமராவார்.”

இவ்வாறு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

மொட்டு கட்சி தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.

” மஹிந்த ராஜபக்சவை சூழ்ச்சிமூலம் பிரதமராக்கவே இராணுவம் களமிறக்கப்பட்டு, கொழும்பில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது என வதந்திபரப்பட்டுள்ளது. அரசியல் ரீதியில் வங்குரோத்து அடைந்த சிலரே இதன் பின்னணியில் உள்ளனர். பரப்புரைகளை முன்னெடுப்பதற்கு ‘பேசுபொருள்’ இல்லாததாலேயே வதந்தி பரப்பும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.

சுதந்திரத்துக்கு பின்னர் இலங்கையில் உருவான சிறந்த தலைவரே மஹிந்த. போரை அவர் முடிவுக்கு கொண்டுவந்தார். இப்படியான ஒரு தலைவரை சூழ்ச்சி, சதி மூலம் பிரதமராக்க வேண்டியதில்லை. அவ்வாறு செய்யயும் மாட்டோம். வருவதாக இருந்தால் அவர் மக்கள் ஆசியுடன்தான் பிரதமர் பதவிக்கு வருவார். எனவே, பிரதமர் பதவியில் மாற்றம் வராது.” – எனவும் மொட்டு கட்சி செயலாளர் குறிப்பிட்டார்.

Related Articles

Latest Articles