பிரதமர் பதவியில் தினேஷ் குணவர்தன நீடிக்கப்பட வேண்டுமென மொட்டு கட்சியின் பெரும்பான்மையான உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளதால், பிரதமர் பதவியில் மாற்றம் வராது என அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.
பிரதமராக செயற்படும் தினேஷ் குணவர்தனவை நீக்கிவிட்டு, அந்த இடத்துக்கு மொட்டு கட்சி பிரமுகர் ஒருவர் நியமிக்கப்பட வேண்டுமென மொட்டு கட்சி எம்.பிக்கள் சிலர் கட்சி தலைமைப்பீடத்திடம் கோரியிருந்தனர். இதனால் பிரதமர் பதவி குறித்து பலகோணங்களில் தகவல்கள் கசிந்தன.
இந்நிலையில் தினேஷ் குணவர்தன சிறப்பாக செயற்படுகின்றார், அவர் பதவியில் நீடிக்கப்பட வேண்டும் என மொட்டு கட்சியின் பெரும்பான்மையான உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
