ஐக்கிய மக்கள் சக்தியின் யாப்பின் பிரகாரம் முதலாவது வருடாந்த மாநாடு (சம்மேளனம்) மார்ச் 6 ஆம் திகதி நடைபெறவுள்ளது.
அதற்கு முன்னர் கட்சியின் அனைத்து கட்டமைப்புகளும் கட்டியெழுப்படும் எனவும், கூட்டணிகூட உருவாக்கப்பட்டிருக்கும் எனவும் ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.
அத்துடன், ஐக்கிய மக்கள் சக்தியின் சம்மேளனத்தின்போதே சம்பிக்க ரணவக்க உட்பட ஹெல உறுமய உறுப்பினர்கள் 21 பேர் அக்கட்சியில் அதிகாரப்பூர்வமாக இணைவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. சம்பிக்கவுக்கு பிரதித் தலைவர் பதவி வழங்கப்படவுள்ளது.
சம்பிக்க ரணவக்கவுக்கான பதவி குறித்து ஐக்கிய மக்கள் சக்திக்குள் தற்போது முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது. கட்சி மாநாட்டுக்கு முன்னர் அப்பிரச்சினைக்கும் தீர்வு காணப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.










