‘பிறந்தநாள் பார்ட்டி’ – பாரதிதாசன் உட்பட ஏழுபேர் தலவாக்கலையில் கைது!

பயணக்கட்டுப்பாட்டுக்கு மத்தியில் தனிமைப்படுத்தல் சட்டத்தைமீறி பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட தலவாக்கலை – லிந்துலை நகரசபைத் தலைவர் பாரதிதாசன் உள்ளிட்ட ஏழுபேர் தலவாக்கலை பொலிஸாரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

தலவாக்கலையில் உள்ள திருமண மண்டபமொன்றிலேயே பிறந்தநாள் கொண்டாட்டத்துக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமையவே இக்கைது இடம்பெற்றுள்ளது. 

கைதானவர்கள் தடுத்துவைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பங்கேற்ற மேலும் சிலர் தலைமைறைவாகியுள்ளனர். அவர்களை கைது செய்யும் நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது. 

 

Related Articles

Latest Articles