பில்லியன் கணக்கான பணத்தை ஈட்டக்கூடிய இலங்கையின் இறப்பர் துறை தொடர்பாக கவனம் செலுத்துவோம்

மனோஜ் உடுகம்பொல – ஆக்கம்

இலங்கை வசமுள்ள அந்நிய செலாவணி இருப்பு எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டிய சூழ்நிலை நிலவுகின்ற இத்தகைய காலகட்டத்தில், இலங்கை இறப்பர் ஏற்றுமதியில் சரியாக பயன்படுத்தப்படாத விசேட பிரிவுகள் தொடர்பாக கவனம் செலுத்த வேண்டிய தேவை எழுந்துள்ளது.

இறப்பர் துறை ஊடாக வெளிநாட்டு நாணயங்கள் ஈட்டுவதை கவனத்திற் கொள்ளும்போது 2024 ஆண்டின்போது துறைக்காக 4.4 பில்லியன் அமெரிக்க டொலர்களை ஏற்றுமதி வருமானமாக பெறுவதற்கு இதற்கு முன்னர் ஏற்றுமதி அபிவிருத்தி சபை இலக்காக கொண்டிருந்தது.

அந்த தொகையான அரசாங்கத்தினால் செலுத்தப்பட்ட (2021 ஜுலை மாத கடைசி வாரத்தில்) சர்வதேச இறையாண்மை பத்திரம் (1 பில்லியன் டொலர்கள்) பெறுமதி போன்று 4.4 மடங்காகும்.

மேலும் குறுகிய காலத்திலிருந்து நடுத்தர காலம் வரை மற்றும் நீண்டகாலம் ஆகிய இரண்டு பிரிவுகளிலும் நாட்டின் ஏற்றுமதி வருமானத்தை அதிகரிப்பதற்கு இந்நாட்டு இறப்பர் துறையால் முடியும்.

குறுகிய காலம் என்ற வகையில் இறப்பர் விலைகள் அதிகரித்து சென்றதை காணக் கிடைத்தது என்பதுடன் அதன் பலனாக வருடத்தின் முதலாவது அரையாண்டில் கொழும்பு இறப்பர் ஏலத்தில் இறப்பர் கிலோவிற்கான விலை 300 ரூபாவிலிருந்து 600 ரூபா வரை இரு மடங்காக அதிகரித்தது.

நீண்டகாலமாக கவனிக்கும்போது குணநலன் கொண்ட தரத்திற்கமைய இறப்பர் உற்பத்தி செய்யும் திறமையானது, ஏனைய நாடுகளில் அதனை உற்பத்தி செய்யாமையானது இலங்கைக்கு போட்டித்தன்மை நிறைந்த சந்தையில் சாதக நிலையை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் இறப்பரில் காணப்படும் விசேட தன்மை காரணமாக (உதாரணமாக, இயற்கையாகவே சிறந்த இறப்பர் அறியப்படும் கேப் இறப்பர் மற்றும் சோல் கேப் தர இறப்பர் உற்பத்திகள் இலங்கையில் மட்டுமே இடம்பெறுகின்றன) இலங்கை இறப்பருக்காக சர்வதேசத்தில் பெற்றுள்ள இடத்தை மேலும் பலப்படுத்த முடிந்துள்ளது.

மேலும் உலகில் பாரிய Industrial solid Tyres ஏற்றுமதி போன்று சத்திர சிகிச்சைகளுக்கு பயன்படுத்தப்படுத்தும் கையுறை ஏற்றுமதி செய்யும் நாடுகள் வரிசையில் இலங்கையும் இடம்பெற்றிருப்பதாக ஏற்றுமதி அபிவிருத்தி சபை குறிப்பிட்டுள்ளது.

தற்போதுள்ள சவால்கள்

நிகழ்காலத்தில் இறப்பர் துறையான இரண்டு பிரதான சவால்களை எதிர்நோக்குகின்றன. அதாவது உர தட்டுப்பாடு தொடர்பான பிரச்சினை மற்றும் இறப்பர் தோட்டங்களில் பரவும் இலைகளுக்கு அழுத்தம் கொடுக்கும் புதிய நோய்த்தன்மை ஆகும்.

இரசாயன உர இறக்குமதிக்கு தடைவிதித்தமை காரணமாக எதிர்வரும் வருடம் அளவில் உற்பத்தியில் 20% குறைவு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அத்துடன் இந்த அழுத்தமானது இன்னும் பல ஆண்டுகளுக்கு நீடிக்கும். பிரச்சினை அதுவாயின், அதன் மிக கொடிய நிலை எதுவெனின் கைத்தொழில்துறையானது இன்னும் படு குழியில் வீழ்வதால் ஏற்படக்கூடிய பொருளாதார மற்றும் வெளிநாட்டு நாணய வருமானத்தை ஈட்டுவதற்கு துறையானது வழங்கும் பங்களிப்பும் குறைவடையும். இலங்கையில் இறப்பர் கைத்தொழிலுடன் தொடர்புபட்டுள்ள பாரிய அளவு மக்களது வாழ்க்கைக்கு (200,000 என மதிப்பிடப்பட்டுள்ளது) இது அழுத்தத்தை கொடுக்கும்.

நிலையான அபிவிருத்தி மற்றும் சிறந்த அறுவடையை பெற்றுக்கொள்வதற்கு இறப்பர் மரத்திற்கு தேவையான போசனைகளை வழங்க வேண்டியது அவசியமாகும்.

இலங்கையின் இறப்பர் செய்கையானது பரம்பரையாக முன்னெடுக்கப்படுவதால் மண் வளம் குறைவடைந்துள்ளமையே இந்த பிரச்சினைக்கான சிக்கல் நிலையாக உள்ளது. ஆகையால் உரிய அளவு உரம் போடுவது அத்தியாவசியமாகும்.

இறப்பர் பயிரிடுவோர் மூன்று வருடங்களுக்கு ஒரு தடவை மண் ஆய்வை செய்து இலங்கை இறப்பர் ஆய்;வு நிறுவக சிபாரிசுக்கு அமைய, தகுதியான உரத்தை பயன்படுத்துவது அத்தியாவசியமாகும்.

அதற்கமைய இலங்கை இறப்பர் ஆய்வு நிறுவகத்தின் வழிகாட்டல்களை பின்பற்றினால், மரத்திற்கு மேலதிக உரம் போடுவது தேவையற்றது. இதிலுள்ள முக்கிய அம்சம் எதுவெனில் மரக்கறி மற்றும் நெல் போன்ற ஏனைய போகங்களுடன் ஒப்பிடுவகையில் இறப்பருக்கான நிலப்பரப்பிற்கு பய்னபடுத்தும் உர மற்றும் இரசாயனம் குறைவாகும். இதனால் தண்ணீர் வளத்திற்கு ஏற்படும் அழுத்தமும் குறைவாகவே இருக்கும்.

குறுகிய கால அறுவடையை குறைப்பதற்கு மேலதிகமாக இலங்கை இறப்பர் ஆய்வு நிறுவகத்தின் சிபாரிசுக்கமைய பயன்படுத்தாமை இறப்பர் அபிவிருத்தி குறைவவதற்கு காரணமாகும் என்பதுடன் இறப்பர் நடப்பட்டு ஆறு ஆண்டு வரையான காலத்திற்கு அது அழுத்தம் கொடுக்கும்.

இது இறப்பர் மரத்தின் மொத்த செயற்திறனின் (உற்பத்தி திறன் கொண்ட இறப்பர் மரத்தின் ஆயுள் 30 வருடங்களாகும்) குறைக்கும் என்பதுடன் அதன்மூலம் ஒட்டுமொத்த செயற்திறனும் குறையும்.

மேற்குறிப்பிட்ட காரணிகளுக்கு மேலதிகமாக, இலங்கை இறப்பர் செய்கையானது எதிர்கொள்ளும் பூச்சிகள் மற்றும் நோய்களுக்கு எதிராக போரிடுவதற்கு மரத்திற்கு தேவையான சக்தியை மேம்படுத்துவதற்கு உரம் அவசியமாகின்றது.

தற்போது இலங்கையின் இறப்பர் பயிர்ச்செய்கை இடம்பெறும் அனைத்து பிரதேங்களிலும் இறப்பர் பயிர்ச்செய்கைக்கு “Pestalotiopsis” என்ற இலை அழுகி கருகிப்போகும் நோயினால் அதிக அழுத்தம் ஏற்பட்டுள்ளது. இந்த நோய் காரணமாக இறப்பர் மரங்களிலுள்ள இலைகள் விரைவாக உதிர்ந்து போகும்.

மீண்டும் மீண்டும் இந்த நோய் காரணமாக பாதிப்புக்கள் ஏற்பட்பட்டால், 40% வரை அறுவடை குறைவுக்கு அது காரணமாக அமையும். துரதிர்ஷ்டவசம் எதுவெனின், இந்த நோயை கட்டுப்படுத்த அநேக இரசாயனங்களுடன் மேலதிக உரத்தை பயன்படுத்துவதே இதற்கான பிரதான சிபாரிசாக அமைந்துள்ளது.

எனினும் இந்த எண்ணம் நிறைவேற்றப்படாமை காரணமாக இந்த பிரச்சினையானது சிக்கல் நிறைந்ததாகவே காணப்படுகின்றது.
நீண்டகால அழுத்தம்

இறப்பர் மீள மீள பயிரிடுவது மிக முக்கியம்போன்று விலை அதிக செயற்பாட்டை இது கொண்டுள்ளபோதிலும் இறப்பர் துறையின் நடத்தை மற்றும் நிலையிறற் தன்மைக்கு இவை பிரதான காரணிகளாக அமைந்துள்ளன. மனங்கவர் இறப்பர் விலையுடன் பயிரிடுபவர்கள் மத்தியில் அதிக அர்ப்பணிப்பு காணப்படுகின்றமையானது உண்மையில் சந்தோஷமான விடயமாகும்.

இருந்தாலும் மேலும் இறப்பர் பயிரிடுபவர்களை துறையில் ஈர்த்துக்கொள்வது பாரிய பிரச்சினையாக உள்ளது. இது நீண்டகாலமாக துறைக்கான சிறந்த நிலை அல்ல.

மீள நடுவதற்கு தேவையான ஆரோக்கியமான மற்றும் பலமான இறப்பர் மரங்களை உருவாக்குவதற்கு மேலும் காலகட்டத்தில் இரண்டு வாரத்திற்கு ஒரு தடவை விசேட உர கலவைகளை செடிகளுக்கு இட வேண்டியது முக்கியமாகும். ஆரம்ப காலத்திற்கு உரம் போதிய அளவு கிடைக்காமையால் மரங்களின் குணநலன்கள் பாதிக்கப்படும் என்பதுடன் எதிர்வரும் 30 ஆண்டுகளுக்கு இந்த இறப்பர் மரங்கள் உற்பத்தி நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்படும் என்பதால் இறப்பர் உற்பத்திகளுக்கு நீண்டகாலம் எதிர்மறையான அழுத்தத்தை கொடுக்கக்கூடும்.

மாற்று தீர்வு

இலங்கை இறப்பர் ஆய்வு நிறுவகம் மற்றும் இறப்பர் பெருந்தோட்ட நிறுவனம் இணைந்து உரங்களை குறைவாக பய்னபடுத்துவதற்காக பல்வேறு திட்டங்களை செயற்படுத்தியுள்ளது. உதாரணமாக முதிர்ச்சியடையாத இறப்பர் பகுதிகளில் இறப்பர் ஆலையைச் சுற்றி புதைக்கப்பட்ட ஒரு நுண்குழாயைப் பயன்படுத்தி மெதுவாக வெளியிடும் உரங்களை அறிமுகப்படுத்துவதற்கான சோதனைகள் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளன.

இதுவரை இந்த நுட்பம் உர பயன்பாட்டை வியத்தகு முறையில் குறைக்க முடியும் என்று தோன்றுகிறது.
அடிப்படையில் பாதியாக. இத்தகைய உத்திகள் உரத்தின் உறிஞ்சுதல் விகிதத்தை அதிகரிக்க உதவுகிறது மற்றும் உரங்கள் மற்றும் உழைப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தோட்டங்களின் பணத்தை சேமிக்க முடியும், எனவே அவை வணிக அளவில் சாத்தியமானால் தோட்டங்களால் இவை ஏற்றுக்கொள்ளப்படும்.

அத்தகைய மாற்று ஊடாக இரசாயன பொருட்கள் பயன்பாட்டினால் சுற்றாடலுக்கு ஏற்படும் அழுத்தத்தை கவனத்திற்கொண்டு குறைக்க முடியும் என்பதுடன் அதனூடாக கார்பன் உரத்திற்கு பதிலாக பாரம்பரிய உரத்தை மாற்றீடாக பயன்படுத்த முடியும்.

மண்ணின் இயற்பியல், இரசாயன மற்றும் உயிரியல் பண்புகளை மேம்படுத்துவதற்காக கார்பன் உரத்தை பயன்படுத்த சிபார்சு செய்யப்பட்டிருந்தாலும், இறப்பர் வளர்க்கப்படும் அநேக இடங்களில் கார்பன் உரத்தை பயன்படுத்தி பின்னர் பூச்சிகள் மற்றும் இலை அழுகி கருகிப் போகும் நோய் நிலை அதிகரித்து சென்றதையும் காண முடியும்.

இதனால் ஏற்படும் துரதிர்ஷ்டவசமான நிலைமை எதுவெனின், பாரம்பரிய உரத்திற்கு பதிலாக பயன்படுத்தக்கூடிய கார்பன் உரத்திற்கு மாற்றீட்டை இன்னும் இலங்கை இறப்பர் ஆய்வு நிறுவகம் பரிந்துரைக்காமை பிரச்சினையாக உள்ளது.

துறையின் மேம்பாட்டிற்காக அனைத்து தரப்பினரும் ஒன்றாக இணைந்து பணியாற்ற தயார்
இறப்பர் துறையானது தற்போது அதிக சவால்களை எதிர்கொண்டு வருகின்றது.

வெளிநாட்டு நாணயங்களை வருமானமாக ஈட்டும் மற்றும் நாட்டு மக்களின் குறிப்பிடடப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பிரிவாக அது உள்ளது. ஆகையால் அத்துறை தொடர்பாக கவனம் செலுத்த வேண்டியது முக்கியம்.

உள்ளுர் உற்பத்தி இறப்பர்களில் உள்ள உயர் இயற்கை குணநலன்கள் மற்றும் ஏனைய நாடுகளில் காணப்படாத குணநலன்கள் அதியுயர் கொண்ட இறப்பர் உற்பத்தி செய்வதற்கு இலங்கையிடம் நிலவும் திறன் காரணமாக நாட்டிக்கு போட்டித்தன்மை நிலவும் நன்மைகள் கிடைத்துள்ளது.

எவ்வாறாயினும் உரம் தொடர்பாக துறையில் தற்போது உள்ள தீர்மானமிக்க குறுகிய கால மற்றும் நீண்டகால சவால்களுக்கு தீர்வு வழங்காவிடின் இந்த நிலைமையை முழுமையாக அடைய முடியாது போகலாம்.

தொழில்துறையின் பங்குதாரர்கள் அதிகாரிகளுடன் தொடர்பு கொள்ள மற்றும் சாத்தியமான தீர்வுகளைக் காண ஆர்வமாக உள்ளனர்.

உரையாடல், ஒத்துழைப்பு மற்றும் ஒத்துழைப்புடன், அனைத்துத் தரப்பினருக்கும் இணக்கமான ஒரு தீர்வைக் காணலாம், இது தொழில்துறையை அதன் உண்மையான திறனுக்கு உயர்த்தும் என்று நாங்கள் நம்புகிறோம்.

ஆக்கம் எழுதுபவர் தொடர்பாக:

மனோஜ் உடுகம்பொல இறப்பர் துறை தொடர்பாக 30 வருடங்களுக்கு மேற்பட்ட அனுபவத்தை கொண்டுள்ளார். அவர் இறப்பர் விற்பனை சங்கத்தின் தற்போதைய உப தலைவராவார்.

புசல்லாவை பெருந்தோட்ட நிறுவனத்தின் இறப்பர் துறையின் பிரதான செயற்பாட்டு அதிகாரியாவார். வயம்ப பல்கலைக்கழத்தின் முன்னாள் மாணவரான அவர் MBA பட்டதாரியாவார்.

வியாபார முகாமைத்துவம் தொடர்பாக முதுகலை பட்டமும் பெற்றுள்ளார்.

அத்துடன் அவர் தேசிய பெருந்தோட்ட முகாமைத்துவ நிறுவனத்தின் பெருந்தோட்ட முகாமைத்துவம் தொடர்பான டிப்ளோமாவையும் பயின்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

படம்
மனோஜ் உடுகம்பொல – இறப்பர் விற்பனை சங்கத்தின் உப தலைவர்

Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05
Video thumbnail
மலையகம் நேற்று இன்று நாளை I Shortfilm
06:51
Video thumbnail
நிலைமாற்றம் I ShortFilm
07:21

Related Articles

Latest Articles