பிள்ளைகளின் புத்தகங்களை எடுக்க சென்ற தாய் கொலை: கணவன் கைது!

மனைவியை, கணவன் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ள கொடூர சம்பவமொன்று எலபாத்த, நிரியெல்ல பகுதியில் இடம்பெற்றுள்ளது.

40 வயதான பெண்ணொருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

குடும்பத் தகராறு காரணமாக கணவன், மனைவி இருவரும் தனித்தனி வீடுகளில் வசித்து வந்த நிலையில், உயிரிழந்த பெண் பிள்ளைகளுக்கான புத்தகங்களை எடுத்து வருவதற்காக கணவன் வீட்டுக்குச் நேற்று சென்ற போதே இந்த அசம்பாவிதம் இடம்பெற்றுள்ளது.

43 வயதான கணவன் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த பின்னர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles