புதிய அமைச்சரவை பேச்சாளர் யார்?

அமைச்சரவைப் பேச்சாளராக ரமேஷ் பத்திரண நியமிக்கப்படக்கூடும் என தெரியவருகின்றது.

புதிய அமைச்சரவையின் முதலாவது கூட்டம் இன்று மாலை ஜனாதிபதி மாளிகையில் நடைபெறவுள்ளது. இதன்போதே அமைச்சரவை பேச்சாளராக ரமேஷ் பத்திரண நியமிக்கப்படுவார் என அறியமுடிகின்றது.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் முதலாவது ஊடக சந்திப்பு நாளை நடத்தப்படவுள்ளது.

கடந்த அமைச்சரவையின்போது, அமைச்சரவை இணை ஊடகப் பேச்சாளராக ரமேஷ் பத்திரண செயற்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles