புதிய ஆட்சியில் பணம் அச்சிடப்படவில்லை

புதிய அரசாங்கத்தின் கீழ் பணம் அச்சிடப்பட்டதாக வெளியான செய்திகள் போலியானவை என அமைச்சரவைப் பேச்சாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (29) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அத்துடன், அரசாங்கம் பணத்தை அச்சிடவோ, வெளிநாடுகளிலோ அல்லது வேறு நிறுவனங்களிலோ கடன் பெறவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

புதிதாக பணம் அச்சிடுவதாக இருந்தால், அதில் நிதி அமைச்சரின் கையொப்பம் இருக்க வேண்டும். எந்தவொரு நாணயத்திலும் புதிய நிதி அமைச்சரின் கையொப்பம் இல்லை.

Related Articles

Latest Articles