எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் ‘ஐக்கிய மக்கள் கூட்டணி’ எனும் பெயரில் புதியதொரு அரசியல் கூட்டணி இன்னும் இருவாரங்களில் உதயமாகவுள்ளது.
இதற்கான ஏற்பாடுகள் தற்போது இடம்பெற்றுவருவதாகவும் புதிய சில கட்சிகளும், அமைப்புகளும் கூட்டணியில் இணைத்துக்கொள்ளப்படவுள்ளன எனவும் தெரியவருகின்றது.
இக்கூட்டணிக்கு தலைமைத்துவ சபையொன்று உருவாக்கப்பட்டு அதன் தலைவராக சஜித் பிரேமதாசவும் பங்காளிக்கட்சிகளின் தலைவர்கள் தலைமைத்துவ சபை உறுப்பினர்களாகவும் செயற்படவுள்ளனர் எனவும் தெரியவருகின்றது.
அத்துடன் புதிய கூட்டணியை பதிவுசெய்யும் நடவடிக்கையும் இடம்பெறவுள்ளது.
சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியுடன் தமிழ் முற்போக்கு கூட்டணி, ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், மக்கள் காங்கிரஸ், ஜாதிக ஹெல உறுமய உட்பட மேலும் சில கட்சிகள் கூட்டணி வைத்துள்ளன. இவை புதிய கூட்டணிக்கு உத்தியோகப்பூர்வமாக உள்வாங்கப்படவுள்ளன.