புதிய கூட்டணி பலம்மிக்க அரசியல் சக்தியாக மாறும் – கம்மன்பில!

புதிதாக உதயமாகும் எமது அரசியல் கூட்டணி பாரிய அரசியல் சக்தியாக தோற்றம் பெறும்.” – என்று பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.

” சர்வக்கட்சி வேலைத்திட்டம் குறித்து பேசப்பட்டாலும் அதற்கான திட்டம் அரசிடம் இல்லை. அது இன்னமும் முன்வைக்கப்படவில்லை. தனியாக அல்லாமல், அனைவரும் இணைந்தே வேலைத்திட்டத்தை உருவாக்க வேண்டும். அதற்கான அர்ப்பணிப்பு தற்போதைய அரசிடம் இல்லை.” எனவும் கம்மன்பில குறிப்பிட்டார்.

சுயாதீன அணிகளின் கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. இச்சந்திப்பின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே கம்மன்பில மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

Related Articles

Latest Articles