புதிய போப் தேர்வுக்கான மாநாடு 7 ஆம் திகதி ஆரம்பம்!

புதிய போப்பை தேர்ந்தெடுப்பதற்கான மாநாடு மே 7-ஆம் திகதி ஆரம்பமாகும் என்று வாடினின் பத்திரிகை அலுவலகமான ஹோலி சீ தெரிவித்துள்ளது.

அந்த அறிக்கையில், “புதிய போப்பை தேர்ந்தெடுப்பதற்கான மாநாடு மே 7-ஆம் திகதி தொடங்கும். தற்போது ரோமில் உள்ள கார்டினல்கள் இன்று (திங்கள்கிழமை) கூடி தங்கள் ஐந்தாவது பொது சபையில் இந்த முடிவை எடுத்தனர்.

இந்த மாநாடு வத்திக்கானில் சிஸ்டைன் சேப்பலில் நடைபெறும். மாநாடு நடைபெறும் நாட்களில் பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

போப் பிரான்சிஸ் மறைவு: கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் மத தலைவரான போப் பிரான்சிஸ் கடந்த 21-ம் திகதி காலமானார். அவரது மறைவுக்கு உலக தலைவர்கள் பலரும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்திருந்தனர்.

போப் பிரான்சிஸின் இறுதிச் சடங்கு கடந்த 26-ம் திகதி நடைபெற்றது.

Related Articles

Latest Articles