ஹட்டன், எபோட்ஸ்லி தோட்டத்துக்கு செல்லும் பிரதான வீதியை புனரமைத்து தருமாறு பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பல வருடங்களாக குறித்த வீதி புனரமைக்கப்படாமல் குன்றும், குழியுமாக காணப்படுகின்றது.
மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி நிற்பதால் சிறு நீச்சல் தடாகம் போலவே வீதி காட்சியளிக்கின்றது.
நோயாளிகள், கர்ப்பணி பெண்களைக்கூட பாதுகாப்பான முறையில் அழைத்துசெல்லமுடியாதளவுக்கு அவல நிலையாக வீதி காணப்படுகின்றது.
பாடசாலை மாணவர்களும் பல்வேறு இன்னல்களை எதிர்கொள்ள நேரிடுகின்றது. மழைக்காலங்களில் சேறுகள்மீதே நடந்து செல்ல வேண்டிய நிலையும் காணப்படுகின்றது.
எனவே, உரிய அதிகாரிகள் மற்றும் அரசியல் தலைமைகள் இவ்வீதியை புனரமைத்து கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.