கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கான – கட்டுப்படுத்துவதற்கான சுகாதார வழிகாட்டல்களை அனைவரும் முழுமையாக பின்பற்ற வேண்டும் என்று பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண கோரிக்கை விடுத்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” புத்தாண்டை முன்னிட்டு நகரப்பகுதிகளில் மக்கள் நடமாட்டம் அதிகமாக காணப்படுகின்றது. பொதுபோக்குவரத்து உள்ளிட்ட நடவடிக்கைகளின்போது சுகாதார நடைமுறைகள் உரிய வகையில் பின்பற்றுவதாக தெரியவில்லை. எனவே, நடைமுறைகளை முழுமையாக பின்பற்ற வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் புத்தாண்டின் பின்னர் சிகிச்சை நிலையத்தில் இருக்கவேண்டிய நிலைமையே உருவாகும்.
ஆகவே, கொரோனா வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்துவதற்கு மக்கள் முழுமையாக ஒத்துழைப்பு வழங்கவேண்டும். சுகாதார வழிகாட்டல்களை உரிய வகையில் பின்பற்ற வேண்டும்.” – என்றார்.